Hope of Glory Ministries https://hogministries.org Hope for the Generation... Thu, 26 Jan 2023 09:53:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 230768331 Hello world! https://hogministries.org/hello-world/ https://hogministries.org/hello-world/#comments Thu, 26 Jan 2023 09:53:20 +0000 https://hogministries.org/?p=1 Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

]]>
https://hogministries.org/hello-world/feed/ 1 1
முழு பெலத்தோடு தள்ளு https://hogministries.org/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81/ Wed, 27 Apr 2016 05:06:50 +0000 http://hogministries.org/?p=372 முழு பெலத்தோடு தள்ளு ??

              Stone

உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். – நீதிமொழிகள் 3:5,6.

ஒரு மனிதன் தன் அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென்று இந்த அறை பிரகாசித்தது. ஆண்டவர் அங்கு தோன்றினார். அவர் சொன்னார், “மகனே நீ எனக்காக ஒரு வேலை செய்ய வேண்டும், உன் வீட்டிற்கு முன் இருக்கிற அந்த பெரிய பாறாங்கல்லை உன் முழு பெலத்துடன், தள்ளவேண்டும்” என்றார். அந்த மனிதனும் ஒத்துக் கொண்டு, காலையும் மாலையும் தள்ள ஆரம்பித்தான். பகலிலே சூரிய வெயிலிலும், இரவிலே பனியிலும் இருந்து, தொடர்ந்து வருடக்கணக்கில் தள்ளிக்கொண்டே இருந்தான். ஆனால் ஒரு சிறுத் துளியும் அந்த கல் நகரேவேயில்லை. ஒவ்வொரு நாள் இரவிலும், ஏமாற்றத்தோடே ‘இந்த நாளில் நான் தள்ளியதெல்லம் வீண், ஒரு இன்ச் கூட (Inch) அந்தக் கல் நகரவேயில்லையே என்று மிகவும் ஏமாற்றத்தோடு அவன் படுக்கைக்குச் செல்வான்.

?அவன் ஏமாற்றத்தோடு இருப்பதை கவனித்த சாத்தான் அவனை இன்னும் சோர்வடையச் செய்ய வேண்டும் என்று அவனிடம் வந்து, ‘நீ இத்தனை நாள் அந்தக் கல்லை தள்ளினாயே ஏதாவது பயனுண்டா❓ என்றுக் கேட்டான்.
? அதற்கு அந்த மனிதன், ‘ஆம் நான் ஒவ்வொரு நாளும் தள்ளியும் ஒரு பிரயோஜமுமில்லை, அந்தக் கல் கொஞ்சம்கூட நகரவேயில்லை’ என்றான்.
?அதற்கு சாத்தான், அப்படியானால் நீ உன்னையே எதற்காக வாட்டிக் கொள்கிறாய்❓
? உன் முழு சக்தியையும் பிரயோகித்து நீ ஏன் தள்ள வேண்டும்❓
? கொஞ்சமாக சக்தியை பிரயோகி, கொஞ்ச நேரம் தள்ளிவிட்டு வந்துவிடு என்று அவனது காதில் ஓதினான். அவன் அதற்கு சம்மதித்து இனிமேல் அப்படித்தான் செய்ய வேண்டும் என்று எண்ணியபடி, முதலில் ஆண்டவரிடம் ஜெபித்து தன் மனதிலுள்ள கேள்விகளை அவரிடமே கேட்டு விட வேண்டும் என்று எண்ணி ஆண்டவரிடம் ஜெபத்தில், ‘நான் அநேக நாட்களாக வருந்தி, நீர் எனக்கு கொடுத்த வேலையை உண்மையாய் செய்து வந்தேன். ஆனால் அதற்கு சிறிதளவுக் கூட பலனில்லையே❓
? ஏன் நான் எதில் தவற விட்டேன் என்று எனக்குச் சொல்லும்’ என்று கேட்டான்.
?அதற்கு ஆண்டவர், “மகனே, நான் உன்னிடம் எனக்காக வேலை செய்ய வேண்டும், உன் முழு பெலத்துடன் அந்தக் கல்லை தள்ள வேண்டும் என்று கேட்டபோது நீயும் ஒத்துக் கொண்டு உன் முழு பெலத்தோடு தள்ளினாய், நான் அந்தக் கல்லை நகர்த்த வேண்டும் என்று உன்னிடம் சொல்லவேயில்லையே❗
?உன்னுடைய வேலை தள்ளவேண்டியது மட்டும்தான்.
? இப்போது நீயாக நீ தவறி விட்டாய் என்று என்னிடம் வந்துச் சொல்கிறாய்,
? உன்னை இப்போது நன்றாக கவனித்து பார்?
?? உன் கைகள் வலிமை மிக்கதாக மாறி விட்டன,
???உன் கால்கள் உறுதியாய் மாறி விட்டன.
?அந்த பாறாங்கல்லை தள்ளி உன் உடலின் ஒவ்வொரு உறுப்பும் மிகவும் சக்திவாய்ந்ததாக, நீ முதலில் இருந்தததை விட பலமடங்கு உறுதி வாய்ந்ததாக மாறிவிட்டது.
? உன்னுடைய அழைப்பு, நீ எனக்கு கீழ்ப்படிந்து, விசுவாசத்தோடே தள்ளவேண்டியது மட்டுமே,. இப்போது நான் அந்தக் கல்லை புரட்டுகிறேன்” என்று கூறினார்.

பிரியமானவர்களே, கர்த்தர் எனக்கு இந்தவேலையைக் கொடுத்திருக்கிறார்
?நான் இவ்வளவு பாடுபட்டும், ஒரு பலனையுமே காணவில்லையே என்று வருத்தத்தோடே இருக்கிறீர்களா❓
? இந்த இடத்திலுள்ள ஆத்துமாக்கள் கல்லை போன்றவர்கள், நான் சுவிசேஷத்தை எத்தனையோ நாடகள் சொல்லியும் எந்தப் பிரயோஜனமுமில்லை என்று வருத்தப்படுகிறீர்களா❓
?நான் என் குடும்பத்தின் இரட்சிப்பிற்காக எத்தனையோ நாளாக ஜெபித்துக் கொணடிருக்கிறேன், எத்தனையோ நாளாக அந்தக் கல்லை தள்ளிக் கொண்டே இருக்கிறேன் ஒரு பலனையும் காணவில்லையே என்று திகைத்து நிற்கிறீர்களா❓
? என் மகன் அல்லது மகளின் இரட்சிப்பிறகாக எததனையோ நாளாக அந்தக் கல்லை தள்ளிக் கொணடே இருக்கிறேன், இன்னும் புரட்டவே முடியவில்லை என்று சோர்ந்துப் போயிருக்கிறீர்களா❓
?உங்கள் வேலை தள்ளுவது மட்டுமே?
? தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இருங்கள்
? தொடர்ந்து கர்த்தருக்காக உங்கள் முழு பெலத்துடன் உழைத்துக் கொண்டே இருங்கள். சோர்ந்துப் போகாதிருங்கள்,
? கர்த்தர் அதன் பலனை காணச் செய்வார்.
?உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய். – (பிரசங்கி 11:1) என்று பிரசங்கியில் நாம் பார்க்கிறோம்.
? கல்லை தள்ள வேண்டியது மாத்திரமே நம்முடைய வேலை
? அதை நகர்த்த வேண்டியது கர்த்தருடைய? வேலை.
?நாம் நம்முடைய வேலையை ஒழுங்காய் செய்தால் , ?கர்த்தர் தம்முடைய வேலையை சரியான நேரத்தில் செய்வார்.
?சோர்ந்து போகாதிருங்கள்.
? சத்துரு வந்து சொல்லும் காரியங்களுக்கு செவி கொடாதிருங்கள்.
? உங்கள் நம்பிக்கை வீண் போகாது, நிச்சயமாகவே முடிவு உண்டு. அல்லேலூயா ஆமென்

]]>
372
நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன் https://hogministries.org/%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f/ Mon, 11 Apr 2016 05:03:52 +0000 http://hogministries.org/?p=247 prince

ஒரு பக்தியுள்ள வயோதிப ராஜவை எதிர்த்து இளவரசன் ஒருவன் படையெடுத்து வந்தான். ‘வயோதிப ராஜா எவ்வளவோ அறிவுரைகளை சொல்லி யுத்தத்தை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டும் கூட இளவரசன் விடாமல் போரிட்டுக்கொண்டிருந்தான்’. எனவே இரக்கமுள்ள வயோதிப அரசர் இளவரசனுக்கு ஒரு பாடம் கற்ப்பிக்க எண்ணி தனது படைத் தளபதிகளிடம் இளவரசனை உயிரோடு பிடித்து வரும்படி கட்டளையிட்டார்.

அப்படியே யுத்தத்தில் இளவரசனை தோற்க்கடித்து அவனை உயிரோடு பிடித்து இராஜாவின் முன்பு நிறுத்தினர்.
இளவரசன் தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடி தன்னை மன்னிக்கும்படியாக கேட்டுக்கொண்டான்.

“அதற்க்கு ஒரு நிபந்தனை இருக்கிறது” என்றார்.
வயோதிப ராஜா.
-“விளிம்புவரை தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம் ஒன்று உனது கையில் தரப்படும்.
அது முக்கிய சாலை ஒன்றின் வழியாக ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே சிந்தாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு மையில் தூரம் கொண்டு செல்ல வேண்டும்.
கூடவே உருவிய பட்டையத்தோடு எனது வீரர்கள் வந்துக்கொண்டு இருப்பார்கள்.
ஒருதுளி தண்ணீர் கீழே கொட்டினாலும் கூட அவர்களின் வாள் உன் தலையைச் சீவிவிடும்.
*வெற்றியோடு முடித்துவிட்டால் விடுதலை”
என்று பேரரசர் தனது நிபந்தனையை விதித்தார்.

குறிப்பிட்ட நேரம் வந்தது. இலட்சக்கணக்கான மக்கள் அந்த சாலையின் இரு பகுதிகளிலும் குழுமியிருந்தனர். போர் வீரர்கள் சாலையை ஒழுங்கு செய்து கொடுத்தனர். பேரரசர் முன்னிலையில் முழுவதும் தண்ணீர் நிரப்பிய பாத்திரம் இளவரசனின் கைகளில் கொடுக்கப்பட்டது.

*ஒரு பகுதியில் இருந்த மக்கள் இளவரசனை ஊக்குவித்து உற்ச்சாகப் படுத்தினர்.
*மறுபக்கத்தில் இருந்தவர்களோ கேலியும் பரிகாசமும் செய்து கூச்சலிட்டனர்.
இளவரசனின் இருபுறமும் வீரர்கள் உருவிய வாளோடு தண்ணீர் சிந்துமானால் வெட்டும்படி கவனித்துக்கொண்டிருந்தனர்.
பாத்திரத்தை உறுதியாய் பிடித்துக்கொண்டான் இளவரசன்.
நடக்க நடக்க சுற்றுப்புறத்திலிருந்து கூச்சலும், பரிக்சமும், ஆர்ப்பாட்டங்களும் கேட்டுக்கொண்டே இருந்தது. எனினும் எதையும் பொருட்படுத்தாதபடி தண்ணீரிலே முழு கவனமும் வைத்து ஓட்டத்தை வெற்றியோடு ஓடி முடித்தான் இளவரசன்.

இளவரசனை பாராட்டிய பேரரசர்
“இளவரசனே உன்னைகேலி செய்தவர்களுக்கு
நீ -தண்டனை- வழங்கலாம்.
உன்னை உற்ச்சாக படுத்தியவர்களுக்கு -நன்றி- சொல்லலாம்.
அவர்களை கவனித்து வைத்திருக்கிறாயா.? என்று கேட்டார்.

-” என்னை போற்றுபவர்களை
நான் கவனிக்கவில்லை, தூற்றுபவர்களையும்
நான் பார்க்கவில்லை.
எனது கவனமெல்லாம் தண்ணீரில் அல்லவா இருந்தது
( விடுதலையோடு கூட அரசர் ஒரு ஆலோசனை தந்தார். *இளவரசனே” பாத்திரத்தில் உள்ள தண்ணீர் தான் உன் சரீரத்தில் உள்ள ஆன்மா நாட்களிலே உன் ஆத்துமாவில் கண்ணும் கருத்துமாக இருந்து கடைசியில் அதை சிருஷ்டிகரிடம் ஒப்படைக்க வேண்டும்.)

-போற்றுவோரைக் கண்டு பெருமை கொள்ளாதே.
-தூற்றுவோரைக் கண்டு சோர்ந்துப் போகாதே.
-ஆத்துமாவில் கவனம் வை” என்றார்…..

பிலிப்பியர் 3: 13
சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,

பிலிப்பியர் 3: 14
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

2தீமோத்தேயு 4: 7
நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.

]]>
247
Shrek the Sheep https://hogministries.org/shrek-the-sheep/ Wed, 06 Apr 2016 04:38:31 +0000 http://hogministries.org/?p=230 197532_417785651607999_1570821128_n

This is Shrek the sheep. He became famous several years ago when he was found after hiding out in caves for six years. Of course, during this time his fleece grew without anyone there to shorn (shave) it. When he was finally found and shaved, his fleece weighed an amazing sixty pounds. Most sheep have a fleece weighing just under ten pounds, with the exception usually reaching fifteen pounds, maximum. For six years, Shrek carried six times the regular weight of his fleece. Simply because he was away from his shepherd.

This reminds me of John 10 when Jesus compares Himself to a shepherd, and His followers are His sheep. Maybe it’s a stretch, but I think Shrek is much like a person who knows Jesus Christ but has wandered. If we avoid Christ’s constant refining of our character, we’re going to accumulate extra weight in this world—a weight we don’t have to bear.

When Shrek was found, a professional sheep shearer took care of Shrek’s fleece in twenty-eight minutes. Shrek’s sixty pound fleece was finally removed. All it took was coming home to his shepherd.

I believe Christ can lift the burdens we carry, if only we stop hiding. He can shave off our ‘fleece’—that is, our self-imposed burdens brought about by wandering from our Good Shepherd.

“Come to Me, all you who are weary and burdened, and I will give you rest. Take My yoke upon you and learn from Me, for I am gentle and humble in heart, and you will find rest for your souls. For My yoke is easy and my burden is light.” Matthew 11:28-30

]]>
230
Wealthy Man’s Thought https://hogministries.org/wealthy-mans-thought/ Mon, 04 Apr 2016 04:18:39 +0000 http://hogministries.org/?p=223 FH-004-Sஒரு பணக்கார முதலாளி,
கார்ல போய்கிட்டு இருந்தாரு.
தெருவோரத்துல இரண்டு மனுஷங்க உட்காந்து,
புல் சாப்டுறத அவர் பார்த்தாரு.
இத பார்த்த அவருக்கு மனசு என்னமோ செஞ்சது.

கார்ர நிறுத்திட்டு,
அவுங்க பக்கத்துல போய்,
நீங்க ஏன் புல்ல சாப்புடுறீங்கன்னு கேட்டாரு.
ஒரு மனுஷன் சொன்னான்.
எங்க கிட்ட சாப்பாடு வாங்க பணம்
இல்ல.
அதனால தான் நாங்க புல்ல சாப்டுறோம்.

அந்த முதலாளி,
அவர பார்த்து,சரி,
நீ….எங்க வீட்டுக்கு வா-ன்னு,
கூப்பிட்டாரு.
அதுக்கு அவன் ஐயா!….
எனக்கு ஒரு பெஞ்சாதியும்,
ஐந்து பிள்ளைகளும் உண்டு.
அதோ பாருங்க, அவுங்க அந்த மரத்துக்கு அடியில உட்கந்துருக்காங்கன்னு சொன்னான்.
அவுங்களையும் கூடிட்டுவான்னு அவரு சொன்னாரு.
அடுத்த மனுஷன பார்த்து நீயும் என் கூட வா_ன்னு,சொன்னாரு.

அதுக்கு அவன், ஐயா!…
எனக்கும் ஒரு பெஞ்சாதியும், ஏழு பிள்ளைகளும் இருக்காங்கன்னு பரிதாபமா சொன்னான்.
எல்லாரையும் கூட்டிட்டு வான்னு முதலாளி சொன்னாரு.
எல்லாரும்,காருக்குள்ள ஏறுனாங்க.
அந்த கார் கப்பல் போல, பெருசா இருந்தாலும்,எல்லாரும் உட்கார கஷ்டமாத் தான், இருந்துச்சு.
ஆனாலும், எப்படியோ, எல்லாரும் உட்காந்துட்டாங்க.
அந்த ஏழை மனுஷன்.
அவர்கிட்ட சொன்னான்.

**முதலாளி,நீங்க…
ரொம்ப கருணை உள்ளம் படைச்சவங்க.
எங்க எல்லாரையும் கூட்டிட்டு போறதுக்கு ரொம்ப நன்றி.

***முதலாளி சிரிச்சிக்கிட்டே சொன்னாரு.

நான் உங்கள சந்தோஷமா கூட்டிட்டு போறேன்.
உங்க எல்லாருக்கும் என்னோட இடம் ரொம்ப பிடிக்கும்.
ஏன்னா, அங்க உங்களுக்கு தாராளமா புல்லு கிடைக்கும்.
என்னோட, லன்ட்-ல, உள்ள புல்லு எல்லாம் கிட்டத்தட்ட, 1 மீட்டர் அளவு வளர்ந்துட்டுது.
இந்த நகைச்சுவை கதையில இருந்து நமக்கு கிடைக்கிற பாடம் என்னதுன்னா,

இந்த உலகத்துல, எல்லா முதலாளிகளும் இப்படித்தாங்க இருப்பாங்க.
தனக்கு காரியம் ஆகனும்னா,
எத செய்யவும் தயங்க மாட்டாங்க.

அதனால, கஷ்டங்கள் வரும் போது, பிரச்சனைகள் வரும் போது,
இந்த உலகத்துல உள்ள,
பணக்காரங்களையோ,
பதவியில இருக்கிறவங்களையோ,
நாடாதீங்க.
நாம தேவனுடைய பிள்ளைங்க.
அவர் கிட்ட, நம்முடைய குறைகள சொல்வோம்.
அவர் எல்லாத்தையும் நமக்கு நன்மையா மாற்றி தருவார்….

]]>
223