Wealthy Man’s Thought

FH-004-Sஒரு பணக்கார முதலாளி,
கார்ல போய்கிட்டு இருந்தாரு.
தெருவோரத்துல இரண்டு மனுஷங்க உட்காந்து,
புல் சாப்டுறத அவர் பார்த்தாரு.
இத பார்த்த அவருக்கு மனசு என்னமோ செஞ்சது.

கார்ர நிறுத்திட்டு,
அவுங்க பக்கத்துல போய்,
நீங்க ஏன் புல்ல சாப்புடுறீங்கன்னு கேட்டாரு.
ஒரு மனுஷன் சொன்னான்.
எங்க கிட்ட சாப்பாடு வாங்க பணம்
இல்ல.
அதனால தான் நாங்க புல்ல சாப்டுறோம்.

அந்த முதலாளி,
அவர பார்த்து,சரி,
நீ….எங்க வீட்டுக்கு வா-ன்னு,
கூப்பிட்டாரு.
அதுக்கு அவன் ஐயா!….
எனக்கு ஒரு பெஞ்சாதியும்,
ஐந்து பிள்ளைகளும் உண்டு.
அதோ பாருங்க, அவுங்க அந்த மரத்துக்கு அடியில உட்கந்துருக்காங்கன்னு சொன்னான்.
அவுங்களையும் கூடிட்டுவான்னு அவரு சொன்னாரு.
அடுத்த மனுஷன பார்த்து நீயும் என் கூட வா_ன்னு,சொன்னாரு.

அதுக்கு அவன், ஐயா!…
எனக்கும் ஒரு பெஞ்சாதியும், ஏழு பிள்ளைகளும் இருக்காங்கன்னு பரிதாபமா சொன்னான்.
எல்லாரையும் கூட்டிட்டு வான்னு முதலாளி சொன்னாரு.
எல்லாரும்,காருக்குள்ள ஏறுனாங்க.
அந்த கார் கப்பல் போல, பெருசா இருந்தாலும்,எல்லாரும் உட்கார கஷ்டமாத் தான், இருந்துச்சு.
ஆனாலும், எப்படியோ, எல்லாரும் உட்காந்துட்டாங்க.
அந்த ஏழை மனுஷன்.
அவர்கிட்ட சொன்னான்.

**முதலாளி,நீங்க…
ரொம்ப கருணை உள்ளம் படைச்சவங்க.
எங்க எல்லாரையும் கூட்டிட்டு போறதுக்கு ரொம்ப நன்றி.

***முதலாளி சிரிச்சிக்கிட்டே சொன்னாரு.

நான் உங்கள சந்தோஷமா கூட்டிட்டு போறேன்.
உங்க எல்லாருக்கும் என்னோட இடம் ரொம்ப பிடிக்கும்.
ஏன்னா, அங்க உங்களுக்கு தாராளமா புல்லு கிடைக்கும்.
என்னோட, லன்ட்-ல, உள்ள புல்லு எல்லாம் கிட்டத்தட்ட, 1 மீட்டர் அளவு வளர்ந்துட்டுது.
இந்த நகைச்சுவை கதையில இருந்து நமக்கு கிடைக்கிற பாடம் என்னதுன்னா,

இந்த உலகத்துல, எல்லா முதலாளிகளும் இப்படித்தாங்க இருப்பாங்க.
தனக்கு காரியம் ஆகனும்னா,
எத செய்யவும் தயங்க மாட்டாங்க.

அதனால, கஷ்டங்கள் வரும் போது, பிரச்சனைகள் வரும் போது,
இந்த உலகத்துல உள்ள,
பணக்காரங்களையோ,
பதவியில இருக்கிறவங்களையோ,
நாடாதீங்க.
நாம தேவனுடைய பிள்ளைங்க.
அவர் கிட்ட, நம்முடைய குறைகள சொல்வோம்.
அவர் எல்லாத்தையும் நமக்கு நன்மையா மாற்றி தருவார்….